இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பேசுகையில் ''நாட்டினை பயங்கரவாதிகள் பிரிப்பதற்கு முயற்சி செய்தனர், முப்படைகளின் உயிர் தியாகத்தால் இன்று நாடு சுதந்திரமாகவுள்ளது, இந்த நாடு ஊழல் அற்ற, அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமை, ஒத்துழைப்பு வழங்கவேண்டும்'' என்கிறார். சுதந்திர தின நிகழ்வில்
பிரித்தானியாவின் இளவரசர் எட்வர்ட் விசேட விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
இவ்வாறு சமாதான தூதுவனாக, நல்லாட்சியின் நாயனாக சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும் இலங்கையில் வாழும் தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது, அவர்கள் இன்னமும் சிங்கள பேரினவாதிகளுக்கு எதிராக போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது.
சுதந்திர தினத்தன்று, இலங்கையில் பேரினவாதிகளால் சுதந்திரம் பறிக்கப்பட்ட சிறுபான்மை இனம் ஒன்று தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தருமாறு
கோரியும், எதுவிதமான விசாரணைகளும் இன்றி பல வருடங்களாக சிறையில்
அடைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுவிக்குமாறு கோரியும், ஜனநாயகத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் நாடுகளில்
ஒன்றாகிய பிரித்தானியாவில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் முன் அமைதியான
முறையில் போராட்டம் நடத்தினர். அதன் போது அங்கு பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகரான இராணுவ உயர் அதிகாரி பிரிங்கார பெனான்டோ போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை நோக்கி " உங்களை நாங்கள் வீடியோ எடுக்கின்றோம்.
உங்களை கொலைசெய்வேன் என்று மிரட்டினார். இலங்கையின் சுதந்திர
தினத்தில் சுதந்திரம் பறிக்கபட்ட ஒரு இனம் விசாரணை இன்றி தடுப்பில் உள்ளவர்களை விடுவிக்க போராடியது தவறா?
இந்த இராணுவ அதிகாரியின்
காட்டுமிராண்டி செயலினை பிரத்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், சனல் 4
, மனித உரிமைகள் அமைப்புகள் வன்மையாக கண்டித்துள்ளதுடன், பிரித்தானிய
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அந்த அதிகாரியை இலங்கைக்கு நாடு கடத்த
வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் பீதியடைந்த
வெளிநாட்டு அமைச்சு இராணுவ அதிகாரியை பதவியில் இருந்து இடைநிறுத்தியது.
ஆனால் நல்லாட்சி செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் நேரடி தலையீட்டில் அவர் மீண்டும்
பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். அதாவது எல்லா இனமும் சமாதானம் ,சம உரிமையுடன் வாழவேண்டும் என்று மேடையில் மட்டும் பேசுவார்கள் ஆனால் சிங்களனுக்கும், சிங்கள தேசத்துக்கும் மட்டுமே பக்கச்சார்பாக நடப்பார்கள். இது பெளத்த சிங்கள நாடு என்ற பேரினவாத
கொள்கை மாறும்வரை எந்த சிங்களவன் ஆட்சிக்கு வந்தாலும் இந்நாட்டில் தமிழர்களின் நிலை
மாறப்போவதில்லை.
Related NEWS London Defence Attaché back to work on MS orders