இன்று 04 ஆம் திகதி இலங்கை தனது 69 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது, அனால் இலங்கையில் உள்ள அனைத்து இனமக்களும் சுதந்திரத்தை அனுபவிக்காத நிலையிலேயே இன்றைய சுதந்திரதினமும் கொண்டாடப்படுகிறது. அதாவது ஈழத்தமிழர்களின் உரிமையும் சுதந்திரமும் பறிக்கப்பட்ட கறுப்பு நாளாகவே இது கருதப்பட்டு வருகிறது .
நாடு சுதந்திரம் அடைந்து 69 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது ஆனால் இலங்கையில் வாழும் இரு பிரதான இனங்களாக கருதப்படும் தமிழ், சிங்கள மக்கள் ஒன்றுமையுடன் சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையை இதுவரை எந்த அரசும் ஏற்படுத்தவில்லை என்பதை
இன்றைய நிரூபித்துள்ளன.ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் அனைத்தும் ஒரே பேரினவாத கொள்கையை பின்பற்றி 1948 ஆம் ஆண்டு முதல் பல இலட்சம் அப்பாவி தமிழர்களை கொன்றது. மீதமுள்ள மக்களின் வாழ்விடங்கள், வாழ்வாதாரங்களை அழித்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக இன்றும் அலைய விட்டுள்ளது. இன்று இலங்கைத்தீவில் ஆட்சி மற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து நல்லாட்சி நடக்கிறது என சர்வதேசத்திற்கு காட்டிக்கொண்டலும் தமிழர்களுக்கு எந்தவித தீர்வையோ, நீதியையோ வழங்கபோவதில்லை. முன்னைய அரசுகளைப் போலவே பௌத்த தர்மத்தை பின்பற்றி எந்தவித தீர்வையும் முன்வைக்காது தமது ஆட்ச்சிக் காலத்தை வெற்றிகரமாக இவ்வரசும் கடந்து செல்லும்.
சுதந்திர தின நிகழ்வுகள் நடைப்பெற்று வரும் நிலையில் முல்லைத்தீவு வர்த்தகர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேப்பாப்புலவு மக்கள் தமக்கு சொந்தமான காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி எம்மிடம் மீள கையளிக்குமாறு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் தேசிய சுதந்திர தினத்தை தமிழ்தேசிய இனத்தின் துக்க தினமாக அறிவிக்க கோரியும், காணாமல் போன 20 ஆயிரம் பேருக்கு அரசே பதில் சொல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுதலை செய், புதிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்து, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதி விராணையை சர்வதேச நீதிபதிகளிடம் ஒப்படை, இனப்பிரச்சினைக்கு சர்வதேச மத்தியஸ்த்ததுடன் தீர்வினை காண், என்ற 6 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் கறுப்பு பட்டி அணிந்து நடைபெற்று வருகின்றது.
மன்னாரில் மேற்கொள்ளப்படவிருந்த கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. எனினும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை கட்டளை பிறப்பித்துள்ள போதும் சட்டத்தை மீறாத வகையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தை அனைத்து இலங்கையரும் கொண்டாட வரும்படி லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று லண்டன் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவமே
வடக்கை விட்டு வெளியேறு , அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும்,
இலங்கையின் சுதந்திரதின நிகழ்வானது தமிழர்களுக்கான சுதந்திரமல்ல என
விடுதலைப்புலிகளின் கொடியினை ஏந்தியவாறு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது இன்றுவரை இலங்கையின் சுதந்திரதினம் கொண்டாடப்பட்டு வருகிறதென்பதே உண்மை.