Wednesday, 7 December 2016

ஜெயலலிதாவின் அரசியல்



என் இனம் அழிக்கப்பட்ட போது, யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள், அதைத் தவிர்க்க முடியாது...! சிங்களவன் நடத்திய தமிழ் இனவழிப்பிற்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அன்றைய கொள்கை....!

MGR முதல்வராக இருந்த போது தேவையற்ற கதைகளை குறைத்து செயல்லளவில் பலவற்றை தமிழர்களுக்காக செய்தார் மற்றைய யாவரும் அரசியல் பேச்சு ஆணால் காரியத்தால் ZERO அம்மா உண்மையில் அக்கறை உள்ளவ என்றால் எப்பவோ இந்தியாவில் தஞ்சமடைந்தவர்களை கவனித்திருப்பா ஏன் சமீபத்தில் Indonesia கடலின் கரையை ஒதுங்கிய அகதி வள்ளம் ஏன் இந்தியாவை விட்டு செல்ல வேண்டும்? அங்கே ஒதுங்கிய போது மக்கள் விரத்தியில் எங்களை கொல்லுங்கள் நாங்கள் எனியும் வாழ்வதில் அர்தமில்லை என்ற நோக்கோடு Indonesia படையினருடன் முன் நேக்கி அவர்களது கட்டுப்பாட்டையும் மீறி படகில் இருந்து தரையில் குதித்தார்கள் இவை மாத்திரமல்ல விரக்தி அடைந்த இன்னும் ஒருவர் அகதி முகாமுக்கு வெளியேயுள்ள மின் கம்பத்தின் மேல் ஏறி தற்கொலை புரிந்து கொண்டார் அம்மா உண்மையிலே அக்கறை உள்ளவராயின் இவை யாவும் நடந்திருக்காது அங்கே மனித தன்மைகள் நடைமுறையாக இல்லாத காரணத்தால் இந்த மக்கள் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார்கள். அம்மாவின் அரசியல் காற்று வீசுவது போல் பல திசைகளில் நிதானம் இல்லாது மாறு பட்ட கருத்துகளுடன் இருக்கும் அரசியல் பேச்சு.