Thursday 13 September 2012

ஊடக சுதந்திரம் இலங்கையில் இறந்துவிட்டது ...


இரண்டு வலைத்தள அலுவலகங்கள் பொலிசாரினால் சோதனையிடப்பட்டு ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கருத்தை வெளியிட்டமைக்காகவே கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இலங்கையினை பொறுத்தவரை கருத்து சுதந்திரம் என்பது முற்றாக மறுக்கப்பட்ட நிலமையே காணப்படுகிறது அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எவரும் எந்நேரமும் கைது செய்யப்படும் நிலமையே இன்றும் காணப்படுகிறது.கடந்தவருடம் நோவெம்பர் மதம் இதே போன்று தமிழ் இணையத்தளம் உட்பட பல இணையத்தளங்கள் தடை செய்யப்படது.


எந்தவொரு ஊடகங்களும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலையே காணப்படுகிறது இதையும் மீறி கருத்துக்கள் வெளியிடும் ஊடகங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவதும் ஊடகவியாலாளர்கள் கைது செய்யப்படும் அல்லது கொலை செய்யப்படும் நிலை இங்கு இயல்பானதாக காணப்படுகிறது.குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் உதயன் பத்திரிகை அலுவலம் பலதடவை தாக்கப்பட்டமை உலகம் அறிந்ததே.