Friday, 15 May 2015

Mullivaikkal Genocide 6th Year Rememberance-இன அழிப்பின் ஆறாவது நினைவு தினம்

Mullivaikkal Genocide
6th Year Remembrance
லண்டனில் பிரமாண்டமான அளவில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சிப் பேரணிக்கான ஏற்பாடு! அலையெனத் திரளுமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு!
லண்டனில் எதிர்வரும் 18 ஆம் திகதி பிரமாண்டமான அளவில் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 6 ஆம் ஆண்டு நினைவெழுச்சி பேரணியில் பிரித்தானியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்க தயாராகுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்திருக்கிறது. 

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் அதேநேரம் பல்வேறு அரசியல் நோக்கங்களை இலக்கிற் கொண்டும் அத்தினம் பேரணியும் பொதுக்கூட்டமும் ஏற்பாடு செயப்பட்டுள்ளது இப்பேரணி நண்பகல் 14 மணிக்கு March Starts: Whitehall Place by Northumberland Avenue (WC2N 5AE) – Nearest Station – Embankment, இல் ஆரம்பித்து, பிற்பகல் 05மணிக்கு Richmond Terrance (SW1A 2AT) – Westminster Station , இல் நிறைவுறும்.

இதனைத் தொடர்ந்து இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்து வருகைதர இருக்கும் பல அரசியல் மற்றும் கலை உலகப் பிரமுகர்கள் உரை ஆற்றுவர் 2009 இல் இலட்சக் கணக்கில் அணி திரண்டு எழுச்சி கொண்டது போல் எதிர்வரும் மே 18 அன்றும் இப் பேரணி பெரும் எழுச்சி காண்பதற்கு பிரித்தானியாவில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் அணி திரண்டெழுமாறு அன்புடனும் உரிமையுடனும் பிரித்தானிய தமிழர் பேரவை
வேண்டிக்கொள்கிறது.


May 18th 2015 - 6th Year Mullivaikkal Remembrance Day - Mass Rally and Vigil Meeting 6 years since the end of the war in May 2009 – the international community failed to protect the Tamil people during the war and failing to deliver justice to the victims.

March Starts: Whitehall Place by Northumberland Avenue (WC2N 5AE) – Nearest Station – Embankment, from 1400 pm

Vigil Meeting Starts: Richmond Terrance (SW1A 2AT) – Westminster Station from 5 pm.

Please join us to call for an International Independent Investigation into the ongoing structural genocide against Tamil Nation.