Tuesday, 12 May 2015

முள்ளிவாய்க்கால் முடிவல்ல

அன்னை மண்ணில் குருதி குதமாய் ஓடிய நாளம்மா இது,

இன்னும் அழுகுரல் கேட்குதம்மா எம் காதுகளில்,

விறு நடை போட்ட இனம் விழ்ந்ததேனம்மா?

வானேறி வந்த கழுகுகள்  குண்டு போட்டு குருதி குடிக்கையில் 

வேடுவர் கூட்டம் எம் இனத்தை வேட்டை ஆடினரே ஈவிரக்கமின்றி 

இரத்தம் குடித்த காட்டேறிக் கழுகுகளே 

எங்களை அழித்ததாக கொக்கரிக்க வேண்டாம் 

வேடிக்கை பார்! 

வீறுகொண்டு  முளைப்பார்கள் எங்கள் வீர வேங்கைகள் 

முள்ளிவாய்க்கால்! இது   முடிவல்ல 

விதைத்த விதைகள் முளைக்கும் ஆரம்ப இடம் நந்திக்கடல் 

அது ஊற்றேடுத்து எம்மை அழித்த உன் ஊரையே அழிக்கும் 

நாள் மிக விரைவில்.............

இது வேறும் நினைவல்ல  எங்கள் அடி மனதில் ஆழமாகப் பதிந்த வேதனைகள் ....................