எதிர்வரும் 04 ஆம் திகதி இலங்கை தனது 67 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது, அனால் இலங்கை ஆங்கிலேயரிடம் இருந்து 1948 February 04 நாடு விடுவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நாள். இன் நாள் ஈழத்தமிழர்களின் உரிமையும் சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாள்.
ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் அனைத்தும் ஒரே பேரினவாத கொள்கையை பின்பற்றி 1948 ஆம் ஆண்டு முதல் பல இலட்சம் அப்பாவி தமிழர்களை கொன்றது. மீதமுள்ள மக்களின் வாழ்விடங்கள், வாழ்வாதாரங்களை அழித்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக இன்றும் அலைய விட்டுள்ளது. இன்று இலங்கைத்தீவில் ஆட்சி மற்றம் ஏற்பட்டுள்ளது, நல்லாட்சி நடக்கிறது என சர்வதேசத்திற்கு காட்டிக்கொண்டலும் தமிழர்களுக்கு எந்தவித தீர்வையோ, நீதியையோ வழங்கபோவதில்லை. முன்னைய அரசுகளைப் போலவே பௌத்த தர்மத்தை பின்பற்றி எந்தவித தீர்வையும் முன்வைக்காது தமது ஆட்ச்சிக் காலத்தை வெற்றிகரமாக கடந்து செல்லும்.
இலங்கை அரசியலில் எத்தனை ஆட்சி மாற்றம் வந்தாலும் ஒருபோதும் தமிழருக்கு விடிவைத் தராதோ, அதே போலவே சுதந்திர தினம் என்பதும் எமக்கு. நாம் அனைவரும் சுதந்திர கற்றை சுவாசிக்க வேண்டுமெனில் அட்சி மாற்றத்துடன் மனமாற்றமும் ஏற்பட வேண்டும் இல்லையெனில் இலங்கையின் சுதந்திர தினம் என்றும் தமிழரின் கரி நாளே.