Thursday, 25 December 2014

politician and Sri Lankan Politics

குறள் 548 (அரசியல் - செங்கோன்மை)

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

உரை:
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

Explanation:
The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgement (on their complaints), will perish in disgrace.



"பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்"
கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்த காமராஜர், டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி தன் உதவியாளரிடம் கூறி விட்டு,தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.

அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.

"டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?"  என்று உதவியாளரை பார்த்துக் கேட்டார் காமராஜர்.

"இல்லை டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா."
"நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா? அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது," எனக் கூறினார்.
இப்ப இருக்கிற ஆட்சியாளர்கள் பொதுமக்கள் உயிரையே மதிக்கமாட்டார்கள், எப்படி  பொதுமக்கள் பணத்தை மதிப்பாங்கள்,எல்லாம் அவங்களின் பரம்பரைச் சொத்தெண்ட நினைப்பு.