ராஜபக்ச குடும்பம் மக்களிடமிருந்தும், ஆளும் வர்க்கத்தின் இரண்டாவது மட்டங்களிடமிருந்தும் அன்னியப்பட்டுப் போயுள்ள நிலையில் , தனக்கு நம்பிக்கையானவர்களே இறுதியில் காலை வாரிவிடலாம் என்ற பெரும் அச்சம் ராஜபக்ச குடும்பத்திடம் தலைதூக்கியுள்ளது.
2015.01.08 ஆம் திகதி தேர்தலில் ராஜபக்ச தோல்வியைத் தழுவினால் நாட்டைவிட்டுத் தப்பியோடுவதற்கு வசதியாக, இறுதிக்கட்ட போரின்போது புலிகளிடம் இருந்து கொள்ளையடித்து ராஜபக்ச குடும்பத்தினரால் பதுக்கிவைக்கப்பட்ட 350 தொன் தங்கத்தை apuga Holdings Private Ltd நிறுவனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஜப்பானிய மில்லியேனேரான Keiji Matsumura என்பவருகு விற்பனை செய்து பணத்தைப் பெற்றுள்ள தகவல் தற்போது கசிந்துள்ளது.
இதுவரையும் ராஜபக்சவுடன் கூடியிருந்த சிங்கள பௌத்த பேரினவாதிகள் , இனப்படுகொலையில் பங்காற்றியவர்கள், ஏகாதிபத்திய அடியாட்கள் போன்ற அனைவரதும் கூட்டான எதிரணி ஜனநாயகத்தை மீட்கப்போவதாக களத்தில் இறங்கியுள்ளமை ராஜபக்சவுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை இத் தங்க விற்பனைக்குக் காரணமாக இருக்கலாம்.
மேலும் ராஜபக்ச திருப்பதி கோவிலுக்கு சென்றமை வழிபாட்டிற்காக மட்டுமல்ல, பணம் மற்றும் தங்கப் பரிமாற்றத்தை கவனித்துக்கொள்வதற்காகவும் என குறிப்பிடப்படுகிறது.