Tuesday 10 March 2015

தமிழ் பிரதேசத்தில் இடம்பெறும் குற்றசெயல்களை தடுக்குமா சிறிலங்காவின் காவல்துறை

யாழில் பொலிஸ் சீருடை அணிந்தவர்கள் நிற்கிறார்கள். அவர்களுக்கு பொலிஸ் சேவை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். குற்றச் செயல்களை தட்டிக் கேட்பார்கள் என்று பார்த்தால் குற்றம் புரிந்தவனுக்கு ஆதரவாக இருந்து கொண்டு நிரபராதியை தண்டிக்கும் பொலிஸார் இங்கு வேண்டுமா? தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்த்துறை இயங்கிய காலப்பகுதி பொன்னான காலப் பகுதியாகும். குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவே கூறமுடியாத காலப் பகுதியாகும். இந்தக் காலப் பகுதியில் தமிழ்ப் பண்பாட்டு கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டது. இன்று தமிழீழ காவல்த்துறையை சிறீலங்கா பொலிசுடன் ஓப்பிட முடியாது அது ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு.

சிறீலங்கா பொலிஸ் தாங்களாகவே அதனை தமிழ் மக்களுக்கு ஞாபகப்படுத்துகிறது. உண்மையில் தமிழீழ காவல்த்துறை தமிழ் மக்களுக்கு மூன்று தசாப்த காலம் பாதுகாப்பைக் கொடுத்தது என்பது உண்மை. இந்த நிர்வாகம் பற்றி சிறீலங்கா பொலிஸ் படித்துக் கொண்டு சேவையாற்றினால் மீண்டும் தமிழ் மக்கள் தீயசக்திகளின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் வாழ முடியும். என்ன கௌரவப் பிரச்சினை என்றாலும் தமிழீழ காவல்த்துறை போல் சிறீலங்கா பொலிஸ் செயற்படுமா என்றால் கேள்விக்குறியே. ஏனெனில் இப்படியாக இளைஞர்களை சீரழித்துவிட்டால் தமிழ் மக்களைப் பற்றியோ அவர்களின் தீர்வு விடயத்தில் அக்கறை காட்டாத இளைஞர் சமூகத்தை வளர்த்துவிடலாம் என சிறீலங்கா பொலிஸ் எண்ணுகிறது.

யாழ் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு சவால் விடுக்க முற்பட்டிருக்கின்ற ரவுடிகளுக்கும் ரவுடிக் கும்பலுக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரை அழைத்து நேரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால் என்ன நீதிபதி இளஞ்செழியனுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் சவால் விடும் வகையில் முன்னரை விட நீதிபதியின் அறிவித்தலுக்குப் பின்னர் யாழில் ரவுடிகளின் அட்டகாசம் கூடிக்கொண்டே செல்கிறது,அவர்கள் சுதந்திரமாக வலம்வருகிறார்களாம் அதனால் அப்பாவி மக்கள் அடங்கி இருக்கின்றனர்.

விசேடமாக யாழ். நகரப்பகுதிகளில் கூட்டமாக கூக்குரலிட்டு மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் பவனி வருவது அவதானிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பாடசாலை மாணவ மாணவிகள், யுவதிகள் பொதுமக்கள் அச்சமடைய நேரிட்டுள்ளது. பொதுமக்களின் போக்கவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகின்றது. இவர்களைக் கண்ட இடத்தில் கைது செய்ய பொலிசார் தயங்கக் கூடாது. இவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது ஆனால் எதுவும் நடக்கவில்லை.
 
விடுதலைப் புலிகள் இருந்த காலப் பகதியில் எப்படி நிர்வாகம் இருந்ததோ அதேபோல் நீதிபதி இளஞ்செழியனும் கொண்டுவர முயற்சி செய்கிறார். இந்த முயற்சிக்கு எந்தளவுக்கு பொலிஸார் ஆதரவு வழங்கவுள்ளனர் என்பது கேள்விக்குறியே. பொலிஸார் ஆதரவு வழங்கினால் மட்டுமே இந்தக் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும். ஆனால் பொலிஸார் ரவுடிகளின் பக்கம் நிற்கிறார்கள்.
உண்மையில் யாழ் இளைஞர்கள் இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு பொலிஸாரும் காரணமாக அமைகின்றனர். அதாவது ரவுடிகளை வளர்ப்பது பொலிஸ் தான் என்பதை யாரும் அறிவர் ,பொலிஸிற்கு கொடுப்பதை கொடுத்துவிட்டால் ரவுடிகளின் அட்டகாசத்தை பொலிஸார் கண்டுகொள்வதில்லை. பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள், கண்காணிப்புகள் நீதிமன்றப் பணிப்புரைக்கு அமைவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுள்ளது ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறுவதில்லை.

இவை அனைத்துக்கும் காரணம் தமிழ் மக்களின் பிரதேசம் என்பதே,  ஊதியம் வருகிறது மேலதிகமாக கப்பம் பெறப்படுகிறது அது போதும் எமக்கு தமிழ் மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன.இவ்வாறன நிலைமையை  தமிழீழ காவல்த்துறை காலத்துடன் ஒப்பிடும் போது அதுவொரு தன்னிகரற்ற ஒரு உன்னத சேவை என்றே சொல்லவேண்டும்.