Monday, 25 July 2016

உயிரியல் பூங்காவில் மகளைத் தூக்கிச் சென்ற புலி - மீட்கப் போன தாய் பலி

சீனாவில் பெய்ஜிங் உயிரியல் பூங்காவில் பெண் ஒருவரை புலி இழுத்து சென்ற சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங் உயிரியல் பூங்காவில் ஒரு குடும்பத்தினர் திறந்தவெளி வாகன சவ்வாரி சென்றனர். அப்போது கார் ஒட்டிக்கொண்டிருந்த பெண் பின் இருக்கைக்கு செல்வதற்காக இறங்கி வந்தார். அப்போது திடீரென சாலைக்கு ஓடிவந்த புலி ஒன்று அவர் மீது பாய்ந்து தரதரவென காட்டு பகுதிக்கு இழுத்து சென்றது. இந்தக் காட்சியைக் கண்டு பதறிய இளம்பெண்ணின் தாயாரும் மற்றொருவரும் அலறியடித்தபடி அப்பெண்ணை மீட்க புலியைத் துரத்திச் சென்றனர். அப்போது, மகளை மீட்க சென்ற தாயை வேறொரு புலி கடுமையாகத் தாக்கியது, இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.